நடு ரோட்டில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற 5வயது குட்டிப் பையன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் 5 வயது சிறுவன் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள் வழியாக காரை ஓட்டிச்சென்று அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

குட்டா மாகாணத்தை சேர்ந்த ஆக்டன் நகரில் போக்குவரத்தை கவனித்துக் கொண்டிருந்த போலீசார் சிறுவன் ஒருவன் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது லம்போகினி சொகுசு கார் வாங்குவதற்காக கலிபோர்னியா நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறியதை கேட்டு திகைத்துப் போயினர்.

 

பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் சிறுவன் காரை எடுத்து வந்ததும் புதிதாக கார் வாங்குவதற்காக மூன்று டாலர்களை அந்த குட்டிப் பையன் வைத்திருந்ததும் தெரியவந்தது.


Leave a Reply