கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சையா?
கொரொனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுமையாக குணமடையாத கொரொனா நோயாளிகளை விருப்பப்பட்டால் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி அனுப்பி வைக்கும் பொறுப்பில்லாத செயல்கள் நடப்பதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இனி கொரொனாவால் பாதிக்கப்படுவோருக்கு அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக டிடிவிதினகரன் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி எனில் அவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு அரசு வந்துவிட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரொனா பேரிடரில் உண்மையை கூறி மக்களை காப்பாற்ற தேவையானவற்றை செய்யுமாறு தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.






