வீடியோ கால் பேசிய போது வெடித்த செல்போன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


செல்போனை சார்ஜ் செய்தபடியே வீடியோ கால் பேசியபோது மொபைல் வெடித்து சிதறிய நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் அப்ளிகேஷன் குறித்து அச்சத்தை அதிகமாக்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்போனை சார்ஜ் செய்தபடியே வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

 

அப்போது பலத்த ஓசையுடன் செல்போன் வெடித்து சிதற அதன் பாகங்கள் அந்தப் பெண்ணின் கண்கள் மற்றும் காதுகளுக்குள் சென்று காயத்தை ஏற்படுத்தியது. செல்போனை சார்ஜ் செய்தபடியே பயன்படுத்தியது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டாலும் அதிக அழுத்தத்தை கொடுக்க கூடிய அப்ளிகேஷன்களும் இதுபோன்ற விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

அண்மை காலமாக ஜும், ஹவுஸ் பார்ட்டி போன்ற வீடியோ கான்பரன்ஸ் அப்ளிகேசன் போன்றவற்றால் சர்ச்சை ஆகியுள்ள நிலையில் இந்த விபத்து அவற்றோடு சேர்ந்துள்ளது. இயல்பாகவே வீடியோ காலிங் செய்ய பயன்படும் அப்ளிகேஷன்கள் செல்போன் செயல்திறன் மீதும் அதிக அழுத்தம் தரக்கூடியது என்பதால் சார்ஜ் செய்து கொண்டே அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அப்ளிகேஷனும் எந்தளவிற்கு பேட்டரியின் சக்தியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆபத்தான அப்ளிகேஷன்களின் மறைமுக செயற்பாடுகள் காரணமாகவும் செல்போன்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.


Leave a Reply