முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை காலமானார்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. 1999 ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியிலிருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலித் எழில்மலை வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் கூடிய சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

 

2001ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் தலித் எழில்மலை. சென்னையில் காலமான தலித் எழில்மலை உடலானது அவரது சொந்த ஊரான மதுராந்தகம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply