ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு மீறலா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா பரவல் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆரோக்கிய சேது செயலியில் எந்தவித பாதுகாப்பு மீறலும் இல்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஆரோக்ய சேது செயலி மூலம் ஒன்பது கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக பிரான்சை சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியட் ஆண்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பதிவிட்டுள்ள ஆண்டர்சன் பின்னர் குறைபாடுகள் குறித்து ஆரோக்ய சேது குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மத்திய அரசின் ஆரோக்ய சேது குழுவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அதில் செயலியை பயன்படுத்தும் எந்த ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களும் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்களால் உறுதிப்படுத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து தங்கள் செயலியை சோதனை செய்து மேம்படுத்துவதாகவும் இதுவரை தகவல்கள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்படவில்லை என்று உறுதி அளிப்பதாகவும் ஆராய்ச்சி செய்த செயலை குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

நாம் செல்லும் இடங்களில் கொரொனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்த ஆலோசனைகளை வழங்க ஆரோக்ய சேது செயலி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


Leave a Reply