வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடலைக்கொண்டு வருவதில் தாமதம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் விடுவிடிய காத்திருந்த உறவினர்களும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார்.

 

இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ஆவார். நேற்று மாலை சந்திரசேகர் உடல் சொந்த ஊருக்கு வந்து விடும் என்ற தகவல் வெளியானதால் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தயாராக இருந்தனர்.

 

ஆனால் அவரது உடல் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சந்திரசேகர் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படவில்லை.


Leave a Reply