கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஹோண்டுராஸ் நாட்டில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அங்குள்ள ரியோஅபச்சோ கிராமத்தில் சாலைகளில் டயர்களை போட்டு மக்கள் தீ வைத்து கொளுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்தனர்.

 

உடல்களை புதைப்பதால் தங்களுக்கும் கொரொனா பரவும் என்ற அச்சம் காரணமாகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ஹோண்டுராஸ்சில் கொரொனாவுக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர், 1,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply