--- --:--:-- --

நாமக்கலில் தடையை மீறி திறக்கப்பட்ட சலூன் கடைக்கு சீல்..!

8

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தடையை மீறி திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு சீல் வைக்கப்பட்டதுடன் அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதிதாக கண்டறியப்பட்ட ஆண்டிபாளையம் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

 

இதனை ஆய்வு செய்து வந்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அந்த பகுதியில் முடிதிருத்தும் கடை திறந்து இருந்ததை கண்டு அதற்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தடை உத்தரவை மீறியதற்காக கடை உரிமையாளரையும் பணியாளரை நோய்த்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

பொது முடக்கம் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு நெல்லை நகரில் திறக்கப்பட்ட பெரும்பாலான கடைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் கூறியதால் வியாபாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நெல்லை நகர் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று 90%கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆரஞ்சு மண்டல பகுதியில் உள்ள நிலையில் இன்றும் வியாபாரிகள் கடைகளை திறந்து வணிகம் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் காவலர்களை அழைத்து வந்து கடைகளை அடைக்க உத்தரவிட்டதால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

கடைகள் திறப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ தெளிவாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் இதனால் குழப்பம் நீடிப்பதாகவும் அவர்கள் கூறினர். எனினும் வேறு வழியில்லாமல் கடைகளை அடைத்து விட்டதாக அதன் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட 63 பேரில் 508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon