கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வீடியோ வெளியிட்ட திருத்தணிக்காச்சலம் கைது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய சென்னையை சேர்ந்த திருத்தணிக்காச்சலத்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருபவர் திருத்தணிகாசலம். இவர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரசை ஒழிப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் திருத்தணிகாசலம் மீது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

 

மேலும் திருத்தணிகாசலம் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருத்தணிகாசலத்தை சென்னை மற்ற பிரிவு குற்றம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Leave a Reply