இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை இந்த அக்னி நட்சத்திரம் நீடிக்கும். முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும் என்றும் அதன்பிறகு படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்போது இந்த அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடிக்க உள்ளதால் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.


Leave a Reply