பூனைக்கறியை மான் கறி என்று கூறி விற்பனை செய்தவர் கைது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பூனை கறியை மான் கறி என்று விற்பனை செய்தவர் உட்பட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் பெரியாங்குப்பம் என்ற இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது மணிகண்டன் என்பவர் பூனை கறியை மான்கறி என்று கூறி பொதுமக்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் 4 கிலோ பூனை கறியை பறிமுதல் செய்தனர். அதேபோல் வெள்ளக்கல் என்ற இடத்தில் மானை வேட்டையாடி விற்ற முருகேசன் என்பவரை கைது செய்து ஒன்பது கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


Leave a Reply