--- --:--:-- --

சொந்த செலவில் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை வழங்கிய கோவை அதிமுக நிர்வாகி !!!

17

தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது.மேலும், தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 3 வது முறையாக வரும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு,தடையின்றி கிடைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

ஊரடங்கினால் தினக்கூலிக்கு செல்வோர்,ஆட்டோ தொழிலாளர்கள் அன்றாட பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தமிழக முதல்வர் ஈ.பி.எஸ்,துணை முதல்வர் ஓ.பி.எஸ் உத்தரவின்படி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒருபகுதியாக கோவை மாநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சிங்கை ஜான் தலைமையில் மாநகர மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் முன்னிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள்,திருநங்கைகள் உட்பட 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் காய்கறிகளை இன்று வழங்கினார்.இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சிங்கை ஜான் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும்,கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீளும் வரை நிவாரண பணிகள் வழங்கும் பணி தொடரும் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon