நடுக்கடலில் வண்ண ஒளியால் மின்னிய கப்பல்! கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை!
ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவிய நிகழ்வை அடுத்து கப்பல்களில் இருந்து வண்ண ஒளி மூலம் கொரொனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் இருந்து மூன்று கப்பல்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு கப்பல்கள் சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் கடற்பகுதியில் ஒரு கப்பல் ஐஎன்எஸ் அடையார் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு கப்பலில் இருந்தும் தலா நான்கு ஒளி பந்துகள் வானை நோக்கி பச்சை நிறத்தில் ஒளி காட்டப்பட்டது.
கொரொனாவுக்கு எதிராக முதல் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கப்பல் படையினர் நிகழ்த்தினர். வான வேடிக்கை போல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவர்கள் கண்டு ரசித்தனர்.






