--- --:--:-- --

மாட்டிக்கொண்ட தல ரசிகன்! மனதில் இடம் பிடித்த தளபதி ரசிகன்!

2.1

கும்பகோணம் அடுத்த தியாக சமுத்திரம் கிராமத்தில் வயல் வெளி பகுதியில் ஒன்றுகூடிய 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய தாக கூறப்படுகிறது.

 

கூட்டத்தில் விசில் பறக்க உற்சாகமாக ஷ்னோ எல்லாம் தெளித்து கேக் வெட்டி மகிழ்ந்த அஜித் ரசிகர்கள் அந்த கொண்டாட்ட காட்சிகளை வீடியோவாக அதனை தங்கள் முகநூலில் கெத்தாக பதிவிட்டனர். இதனால் போலீசில் தேடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை கொண்டு பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த முக்கிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தனிநபர் இடைவெளி ஒன்று கோருவதை கட்டுப்படுத்தும் என்று அரசு பலமுறை சொல்லியும் கேட்காமல் ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதே நேரத்தில் சென்னை கொரொனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரம்பூர் விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணியினர் சாலையோரம் உணவின்றி தவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்தனர்.

 

கொரொனா ஊரடங்கு நீடித்தாலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தனிநபர் இடைவெளியும் அரசின் அறிவுரைகளை ஏற்று நடப்பதுமே கொரொனாவை கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்து விழிப்புடன் இருப்போம் கும்பலாக விடாமல் ஊர் சுற்றுவதும் தவிர்ப்போம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon