தமிழகத்தில் கொரொனா பாதிப்பு 3,000 ஐ கடந்துள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 த்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 2,757 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 266 நபர்களுக்குக் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அரியலூர் மாவட்டத்தில் நேற்று வரை 26 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று கூடுதலாக இரண்டு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக இந்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 92 பேர் ஏற்கனவே கொரொனா தொற்று கண்டறியப்பட்ட வர்களாக இருந்தார்கள். இன்று மேலும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் அங்கு கொரொனா எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று வரை 1,255 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கூடுதலாக இன்று 203 நபர்கள் மேலும் கொரொனா தொற்று கண்டறிய பட்டவர்களாக உள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,458 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று வரை 142 பேர் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இன்று மேலும் நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 30 ஆக இருந்த எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சியில் இன்று மேலும் ஆறு நபர்களுக்கு தோற்று கண்டறியப்பட்டுள்ளது இதன் மூலம் அங்கு 9 ஆக இருந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் ஒரு நபர் தொற்று கண்டறியப்பட்டவராக இருக்கிறார். இதன் மூலம் அங்கு 16 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.

 

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 88 பேர் கொரொனா அறிகுறியுடன் இருந்தார்கள். இன்று மேலும் இரண்டு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையின் எண்ணிக்கை 90 என உயர்ந்துள்ளது. தென்காசியை பொருத்தவரை 38 ஆக இருந்த எண்ணிக்கை இன்று இரண்டு நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 40 ஆக உயர்ந்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரண்டு பேர் தொற்று கண்டறிய பட்டவர்களாக உள்ளனர். இதன் மூலம் அங்கு எண்ணிக்கை 68 லிருந்து70 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 15 ஆக இருந்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக 33 நபர்கள் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆக உள்ளனர். இதன் மூலம் அங்கு 55 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 86 என உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நேற்றுவரை 2,757 என்ற எண்ணிக்கை இன்று 266 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 3,023 என்று மாறியுள்ளது.


Leave a Reply