போலீஸிடம் பொய் சொல்லி சுற்றினால் ஐ டிரேக்கர் காட்டிக்கொடுத்துவிடும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் என்று பொய்யாக கூறிவிட்டு வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை கண்டறிய சென்னை காவல்துறை சார்பாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ டிரேக்கர் எனும் செல்போன் செயலியை பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து போலீசாரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்து கொண்டு அவர்களுக்கு பாஸ்வேர்ட் மற்றும் பதிவு எண் கொடுத்துள்ளனர்.

 

அத்தியாவசிய தேவைகள் என்று வாகனங்களில் வெளியே வரும் நபர்களின் வண்டி எண், ஆதார் எண், ஓட்டுனர் லைசென்ஸ் எண், செல்போன் எண் ஆகியவற்றை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்து விட்டால் அவர்களின் பெயர், முகவரி ஆகியவை இந்த செயலியில் பதிவாகிவிடும். மேலும் அவர்கள் செல்வதற்கான காரணம் மற்றும் தற்போதைய இடம் ஆகியவையும் இந்த செயலியில் பதிவாகிவிடும்.

 

இதேபோல் ஒரு நபர் அடிக்கடி அத்தியாவசிய தேவைகள் என்று வெளியே சுற்றினால் அந்த செயலியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மூலம் கண்டறிந்து வாகனங்கள் குறிப்பிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு எளிதாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply