காஷ்மீர் குங்குமப்பூவிற்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கஷ்மீரில் தான் குங்குமப்பூ அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்ரீ நகருக்கு கிழக்கே உள்ள பாம்பூர், அலம்னா உள்ளிட்ட இடங்களில் இதனை உற்பத்தி செய்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலமாக குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

உணவுக்கு சுவையூட்டி, வண்ணம் கொடுத்து நறுமணம் கொடுக்கும் மருத்துவ குணமுடைய காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இதனை வர்த்தகம் செய்ய முடியும் என்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


Leave a Reply