கோவையில் தூய்மை பணியாளர்களின் கால்களை சுத்தம் செய்து திருநீர்,சந்தனம் பூசி மலர் தூவி மரியாதை செய்த பா.ஜ.க – வினர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.இதனால் முக்கிய தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இது போன்று வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் ஆலோச னையின் படி பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.புரம் மண்டல் பா.ஜ.க.சார்பாக 23,24,77, மற்றும் 79 வார்டுகளுக்கு உட்பட்ட ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை தொகுப்புகள் காந்தி பார்க் பகுதியில் வழங்கப்பட்டது.மண்டல் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இதில் பேரூர் தனி வட்டாச்சியர் சத்யன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி சுத்தம் செய்த பா.ஜ.க.வினர் கால்களில் திருநீர் பூசி, சந்தனம் தேய்த்து மரியாதை செய்தனர். இதில் கோவை மாவட்ட பா.ஜ.க.பொது செயலாளர் ரமேஷ் மற்றும் பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் ஏற்கனவே சுமார் 2000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நிலையில் இன்று மேலும் 600 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் ஆர்.எஸ்.புரம் மண்டல் சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply