வெயில் குறைஞ்சா.. கொரோனா அதிகமாயிடுமாம்…! ஆராய்ச்சி தகவல்
சென்னை: வெப்பநிலை குறையும் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவும் என்று சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வெப்பம் குறைந்த பகுதிகளில் தீவிரமாக பரவுமா என்பது குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிலையம் ஒரு ஆய்வை நடத்தியது. பேராசிரியர் சச்சின் குந்தே என்பவர் தலைமையிலான குழு ஆய்வில் இறங்கியது.
ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை தந்திருக்கின்றன. வெப்பநிலை, புற ஊதா கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கையாக புற ஊதா கதிர்வீச்சை உருவாக்கினால் சமூக பரவலை தடுக்கலாம். உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டு உள்ளதாக ஐஐடி தெரிவித்துள்ளது.






