கழுதைப்புலிகளுக்கு தோழியாக மாறியுள்ள 2 வயது குழந்தை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் இரண்டு வயது சிறுமி கழுதைப்புலிகள் உடன் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. உயிரின சரணாலயத்தில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த கிம் என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வருவதால் அவரை கண்டு வனவிலங்குகள் அச்சம் கொள்வதில்லை.

 

இந்த நிலையில் கிம்மின் 2 வயது குழந்தையான கீர்த்தி ஒல்டர் அப்பகுதியிலுள்ள கழுதை புலிகளுக்கு மிகவும் பிடித்தமான தோழியாக மாறியுள்ளார். இந்த சிறுமியை தினமும் காண வரும் கழுதைப்புலிகள் அவருடன் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. சிறுமி விளையாடும் நேரத்தில் பாதுகாப்பு கருதி அவரது தந்தையுடன் சென்று வருகிறார்.

 

கழுதை புலிகளுக்கும் குழந்தைகளுக்குமான உறவை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரியில் முக கவசம் அணியாமல் வந்து போலீசாரிடம் சிக்க இருந்த நபர் ஒருவர் பதற்றத்தில் கையில் வைத்திருந்த துணிப் பையை மாட்டிக்கொண்டு சமாளித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் முகக் கவசம் அணிய வில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை மறந்து லாஸ்பேட்டை பகுதியில் நடுத்தர வயது நபர் ஒருவர் துணிப்பையுடன் பால் வாங்க கிளம்பியுள்ளார்.

 

போலீசார் திடீரென பார்த்ததும் செய்வதறியாது அந்த கைகளில் வைத்திருந்த பையை காதோடு சேர்த்து அதனை முக கவசமாக மாற்றியுள்ளார்.


Leave a Reply