அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? தகராறில் கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கொரொனா நிவாரண உதவி தொகை அதிகம் கொடுத்தது விஜயா ரஜினி என்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மரக்காணத்தை சேர்ந்த யுவராஜ் என்ற 22 வயது இளைஞர் விஜய் ரசிகர். இவரும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரஜினி ரசிகரான தினேஷ் பாபுவும் நண்பர்களாக இருந்தனர்.

 

பொது முடக்கத்தால் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் கொரொனா பாதிப்புக்கு அதிகம் நிவாரண நிதி கொடுத்தது ரஜினியா? விஜயா? என்று இருவரும் பேசிக் கொண்டதாக தெரிகிறது. விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு தீவிரமடைந்து இருவரும் சண்டையிட்டனர். அப்போது யுவராஜை தினேஷ்பாபு கீழே தள்ளிவிட்டதில் யுவராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொரொனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்த கேரளாவில் வைரசால் பாதிக்கப்பட்ட 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மலப்புரத்தை சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு நேற்று கொரொனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

சிகிச்சை பலனின்றி இன்று காலை இந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு கடந்த மூன்று மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனை மற்றும் நிமோனியா காய்ச்சல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் கொரொனா வைரசால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply