இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்!

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் பொருட்களை வழங்கினர்.கொரோனா வைரஸ் முழு ஊரடங்கால், வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் சின்னபாலத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ரூபாய் 15,120 மதிப்பில், சின்னப்பாலம், தோப்புக்காடு, அன்னை நகர், மொட்டையன் பனை பகுதிகளுக்கு உட்பட்ட 54 குடும்பங்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி தலா 5 கிலோ அரிசி வழங்கினர்.பள்ளி தலைமையாசிரியர் இரா.செல்லம்மாள், ஏற்பாடு செய்திருந்தார்

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், கே.மிக்கேல் ராணி, ஜெ.ஜே.லியோன், மலர்,சரண்யா, ஆரோக்ய ரீகா, மோ.லாரன்ஸ் எமல்டா, பூ.ஞானசெளந்தரி, பா.சந்திரமதி, எஸ்.நிஷா, தமிழரசி, .மேலும் ஒன்றிய கவுன்சிலர் மூ.லெட்சுமி, வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள், கிராம நிர்வாகிகள் மாரி வேல்,சீனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply