வடமாநிலங்களில் குறைந்தது காற்று மாசு! செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிட்ட நாசா

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


வடமாநிலங்களில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைந்து இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. கொரொனாவால் உலகம் முழுவதும் முடங்கி இருக்கும் நிலையில் வாகனம் மற்றும் தொழிற்சாலைகளால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த ஆண்டு நாளுக்கு நாள் மிகுந்த அபாய கட்டத்திற்கு சென்று இருந்தது.

 

ஆனால் தற்போது வடமாநிலங்களில் முழுவதும் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்து இருப்பதாக தெரிவிக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு எந்த அளவுக்கு காற்று மாசு குறைந்திருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு உள்ளது.

 

ஊரடங்கை மீறுவோரை தடுப்பதற்காக அண்ணாசாலையை சென்னை காவல் துறையினர் மூடினார். கொரொனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்றியமையா தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கை மீறி சிலர் வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.

 

பொதுமக்களின் இன்றியமையா தேவைகளை நிறைவு செய்வதற்காக அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இன்றியமையா பொருள்கள் வாங்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் முக்கியமான சாலைகளை மூடவும் திட்டமிட்டுள்ளன.

 

முதற்கட்டமாக அண்ணா சாலையில் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சிக்னல் வரை உள்ள சிக்னல்களை மூடிய காவல்துறையினர் அத்து மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

அண்ணாசாலை, சென்னையில் உள்ள எந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதோ அந்த சாலைகளையும் மூட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


Leave a Reply