ஊரடங்கு உத்தரவை உதாசினப்படுத்துகிறதா திருப்பாலைக்குடி ஊராட்சி ! மீன் வாங்க குவிந்த மக்கள் !! சுகாதாரமின்றியும் காணப்படும் ஊராட்சி !!!

Publish by: மகேந்திரன் --- Photo :


ஊரடங்கு உத்தரவை மீறி மீன் வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய சம்பவம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் அரங்கேறியுள்ளது. இங்கு சமூக இடைவெளி என்பது கேள்விகுறியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயால் அனைவரும் அச்சத்தால் இருந்து வரும் சூழ்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி பகுதியில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றி திரிகின்றனர்.

குறிப்பாக இந்த ஊராட்சி பகுதியில் மீன்பிடி வேலை தினமும் நடைபெறுவதால் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் போன்ற எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பும் இல்லாமல் மீனை வாங்க கூட்டமாக மக்கள் திரண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதுகாப்பு குறித்து மாநில அரசு, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலர் விதிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பலருக்கு கொரோனா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply