கொளுத்தும் வெயிலினையும் பொருட்படுத்தாமல் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் எம்.எல்.ஏ – க்கள் !!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 இல் இருந்து 1629 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 134 ஆகவும்,குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியினை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.இந்த நிலையில் தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,மாணவர்களும் தாமாக முன்வந்து முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதியினை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.11.04 கோடி முதல்வர் நிதிக்காக வந்துள்ளது.
மேலும்,தன்னார்வலர்கள் பலரும் தாமாக முன் வந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பொதுமக்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.அரசு சார்பிலும் பொது மக்களுக்கு வீடு,வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது.தேவைப்படுவோர்க்கு அரசு சார்பில் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பன்னிமடை,நஞ்சுண்டாபுரம்,சின்னத்தடாகம்,நம்பர்.24 வீரபாண்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை மாநகர் மாவட்ட செயலாளரும்,வடக்கு தொகுதி எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஆகியோர் இன்று காலை முதல் கொளுத்தும் வெயிலினையும் பொருட்படுத்தாமல் நடந்தே சென்று நான்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு,வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார்,பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் நர்மதா துரைசாமி,ஒன்றிய கவுன்சிலர் தீபிகா சுந்தரமூர்த்தி,சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் செளந்திரவடிவு ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






