--- --:--:-- --

“மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டருக்கு கொரோனா..!”கோயில் வளாகம் முழுதும் கிருமி நாசினி தெளிப்பு..! பணியாளர்களுக்கும் பரிசோதனை!!

6

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கம் பணி மேற்கொள்ளப்பட்டது.அத்துடன் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள், குருக்கள்கள் மூலம் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இது போன்றே உலகப் பிரசித்தி பெற்று மதுரை மீனாட்சி கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டு, தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி பூஜைகள் நடத்தி வந்த மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பட்டர் சமீபத்தில் குடும்பத்துடன் வெளிநாடு சென்று வந்த நிலையில், தொடர்ந்து கோயிலில் பூஜைகள் நடத்திய நிலையில் இன்று தான் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

 

இதனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.அத்துடன் கோயிலில் கடந்த சில வாரங்களாக பணியில் இருந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் என அனைவரிடமும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon