மரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மேற்கு வங்க மாநிலத்தில் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரியர் மரத்தின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மேற்கு வங்க மாநிலம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

 

தங்கள் கிராமத்தில் உள்ள எந்த வீட்டிலும் இணைய இணைப்பு சரிவர கிடைக்கவில்லை எனக் கூறி ஆசிரியர் தன் வீட்டருகே உள்ள மரத்தின் மேல் ஏறி வகுப்புகளை நடத்தி வருவதாக தெரிவிக்கிறார். மரத்தின் மேல் பகுதியில் சிக்னல் நன்றாக கிடைப்பதால் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை அமர்ந்தபடியே பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு தன்னுடைய ஸ்மார்ட்போன் மூலம் கற்றுத் தருவதாக கூறுகிறார்.

 

கொல்கத்தாவில் நோயாளிகளை விட்டு விட்டு திரும்பும்போது ஒடிசா மாநில எல்லையில் காவல் துறையினர் சிறை பிடித்து இருப்பதால் மூன்று நாட்களாக உணவு கிடைக்காமல் தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தவித்து வருகிறார்கள். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்சில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சேர்ந்த நோயாளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

 

அவர்கள் செல்லும்போது மேற்கு வங்க மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் நோயாளிகளை விட்டுவிட்டு திரும்பி வரும்போது மேற்கு வங்கம் ஒடிசா மாநில எல்லையான பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒடிசா மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

அவர்களை அம்மாநில காவல்துறையினர் விடுவிக்க மறுப்பதால் கடந்த 20ஆம் தேதி முதல் உணவின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே தமிழக அரசு தங்களை மீட்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.


Leave a Reply