சாலையில் செத்து மடிந்த காகங்களால் பரபரப்பு…நோய்தொற்று இருக்குமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நாகை மாவட்டம் சீர்காழி அருகே 50க்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து சேதமடைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பூம்புகார் காலனி குடியிருப்பு பகுதியில் கூட்டம் கூட்டமாய் கரைந்து கொண்டிருந்த காகங்கள் சில மணித்துளி இடையே ஆங்காங்கே செத்து விழுந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மரணமடைந்த காகங்கள் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டனவா யாரேனும் நஞ்சு வைத்துக் கொன்றார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் வெளிநாட்டு பறவைகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கர பாண்டிபுரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.

 

செங்கால் நாரை உட்பட பல பறவை வகைகள் படை எடுத்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் கீச்சு ஒலிகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் கோடைகாலம் காரணமாக பறவைகளுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது . எனவே இனப்பெருக்க காலம் முடியும் வரை தற்காலிக தண்ணீர் தொட்டிகள், குட்டைகள் அமைக்க வேண்டும் என பறவைகள் நல அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply