--- --:--:-- --

ஈரான் ஏவிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

8

ராணுவ உளவு மற்றும் தகவல் தொடர்புக்கான முதலாவது செயற்கைக்கோளை ஈரான் வெற்றிகரமாக ஏவியுள்ளது. மறுக்காசி பாலைவனத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நூர் என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. செயற்கைக்கோளை ஏவியது முக்கியமான சாதனை என்று ஈரான் ராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 

உளவுத் துறையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக கூறிய அவர் இந்த நடவடிக்கை ஈரானுக்கு விண்வெளித் துறையில் பெரிய வெற்றியாகவும் புதிய வளர்ச்சியாகவும் இருக்கும் என்றார். ஈரான் ஏவிய செயற்கைக்கோள் பூமியில் இருந்து 425 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு புவி வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

 

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரொனா நடவடிக்கையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும்.

 

இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மூன்று வேளையும் சத்தான உணவு கிடைக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சிக்கு கிடைத்த நன்கொடையை பயன்படுத்தி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon