--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு..! சென்னை தான் பட்டியலில் தொடர்ந்து “டாப்”!!

7

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம் போல இன்றும் சென்னையில் தான் அதிக அளவாக 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 400 ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 1500 என்ற வீதத்தில் உயர்ந்து மொத்த பாதிப்பு 22 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிரிழப்பும் 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் தான் பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது. அங்கு 5462 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் தேதி முதல் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் தவிர்த்து மற்ற நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இதனால் தமிழகம் 5 – வது இடத்துக்கு பின் தங்க ஆரம்பித்துள்ளது.

 

இன்றும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பும் 20 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் சென்னை நகரம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றும் 27 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 400 ஆகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon