தமிழகத்தில் கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீரை பருகலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க இந்திய மரபு வழி மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றனவா என்று அந்தத் துறை வல்லுநர்கள் உடன் முதலமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

 

அதன் பிறகு மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காகவும் ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர், சூரணம் பொட்டலங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதன் தொடக்கமாக காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் பருகுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த சிறப்பு திட்டத்தின் வழிமுறைகள் கொரொனா நோய்க்கான சிகிச்சை அல்ல என்றும் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மருத்துவர்களுக்கு அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்று மீண்டும் வாக்குறுதி தந்தார்.


Leave a Reply