சுவையை இழந்த கொரோனா நோயாளிகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்று பாதித்த பல நபர்களுக்கு சுவை மற்றும் நகரும் தன்மை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. சளி பரிசோதனை நடந்த 6 நாட்களுக்கு பிறகு லண்டன் ஹாஸ்பிடல் சேர்ந்த மருத்துவர்கள் இத்தாலியை சேர்ந்த 202 கொரொனா நோயாளிகளிடம் தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வை நடத்தினர்.

 

அதில் 67 சதவீதம் பேருக்கு வாசனையை நுகரும் தன்மையை அளிக்கும் தன்மையும் காணாமல் போய்விட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. 68.3 சதவீதம் பேர் தங்களது கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வரட்டு இருமலும் 55.5 சதவீதம் பேர் காய்ச்சல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.

 

இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்பட்டால் இது போன்ற தன்மையை இழக்கும் நபர்களுக்கு சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் போதிய கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


Leave a Reply