விழுப்புரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறந்திருக்கும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விழுப்புரத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த மொத்த காய்கறி சந்தை, பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த சில்லரை காய்கறி சந்தை நகராட்சி மைதானத்தில் நடைபெற்று வந்த உழவர் சந்தை மற்றும் விழுப்புரத்தின் முக்கிய வீதிகளில் இயங்கி வரும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டன.

 

மக்களின் நலன் கருதி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்திருக்கும் மூன்று நாட்களிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் இயங்கும் என்றும் பால் மற்றும் மருந்து கடைகள் அனைத்து நாட்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூரில் தடையை மீறி கடைகளைத் திறந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓமலூர் பேருந்து நிலையம் அண்ணாசாலை அருகே இருந்த ஒரு ஹார்ட்வேர் கடையை ஒருவர் திறந்ததை தொடர்ந்து ஓமலூர் நகரில் உள்ள கடைகள், துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், செல்போன் கடைகள், என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

 

மேலும் ஒரு சிலர் கடையின் ஷட்டரை பாதி திறந்து விற்பனை செய்து வருகிறார்கள் சேலம் மாநகர தாரமங்கலம் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் ஓமலூரில் கடை திறக்கப்பட்டதை அறிந்து இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

 

இதனால் ஓமலூர் ஊரடங்கு என்ற விதியை வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. இதனை அறிந்த காவல்துறையினர் கடைகளை திறக்கக் கூடாது என அறிவுறுத்தினார். தடையை மீறி கடைகளைத் திறந்த 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் விடுவித்தனர்.


Leave a Reply