கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலம்! கொலையா ?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா ஊரடங்கின் போது வெளியே சுற்றிய இளைஞர் பாழும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுவது உண்மையா?

 

கரூர் மாவட்டத்தில் பால் வியாபாரியை நான்கு பேர் சேர்ந்து தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த திம்மாவரம் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான சரவணன். இவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். திம்மாபுரம் கிராமத்தில் உள்ள தாய்மாமன் வீட்டில் சரவணன் தங்கியிருந்தார்.

 

செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர் ஹரியுடன் தனது இருசக்கர வாகனத்தில் அச்சரப்பாக்கம் மாதா கோவிலுக்கு சென்றுள்ளார். அச்சரப்பாக்கம் திம்மாபுரம் சாலையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இரண்டு காவலர்கள் இருந்துள்ளனர். சோதனை நடத்தும் இடத்தில் போலீசார் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கை காட்டிய போது சரவணன் நிற்காமல் சென்றதால் காவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

 

அவர்களுக்கு பயந்து சாலையிலிருந்து விலகி முட்புதர்கள் அடர்ந்து உள்ள பகுதியில் வாகனத்துடன் இறங்கியுள்ளார் சரவணன். ஒரு கட்டத்தில் வாகனத்தை போட்டுவிட்டு இருவரும் முட்புதருக்குள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அப்போது இருட்டில் அங்கு கிணறு இருப்பது தெரியாமல் சரவணன் அதற்குள் விழுந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

 

வேறு திசையில் ஓடிய ஹரிஷ் அங்கிருந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். சரவணன் காலையில் வந்துவிடுவார் என நம்பியிருந்தார். ஆனால் காலையில் அந்த முட்புதருக்குள் சென்று பார்த்தபோது சரவணன் கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வழக்கை திசை திருப்பி சரவணனை விரட்டிய காவலர்களை தப்பவைக்க முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

 

நண்பர்களுடன் சென்ற சரவணன் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகவும் இதில் காவலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply