தனது தங்கையை காண 130 கி.மீ நடந்தே சொந்த ஊர் சென்ற அண்ணன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உடல்நிலை சரியில்லாத தனது தங்கையை காண சிவகங்கையிலிருந்து திண்டுக்கலுக்கு நடந்தே சென்ற அண்ணனின் பாசம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. சிவகங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜோஷ்வா என்ற இளைஞர் ஊரடங்கு அமல் ஆனதால் நிவாரண முகாமில் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனது தங்கைக்கு உடல் நிலை சரியில்லை என தகவல் வர நடந்து ஊருக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அதிகாலையில் சிவகங்கையில் இருந்து புறப்பட்ட ஜோஷ்வா 130 கிலோமீட்டர் பயணித்து மாலையில் சொந்த ஊருக்கு சென்று அடைந்தார்.

 

இந்தியாவில் கொரொனா நோய் பாதிப்பு மே மாதம் மத்தியில் உச்ச கட்டத்தை அடைந்து படிப்படியாக பாதிப்பு குறையும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச நிறுவனமான ப்ரோவிட்டியுடன் செய்து டைம்ஸ் பத்திரிக்கை குழுமம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாகக் கொண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

 

அதில் மே மாதம் 22ஆம் தேதி இந்தியாவில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பாதிப்பு பூச்சியமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் மே 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால் ஜூன் மாதம் மத்தியில் பூச்சியமாக குறைய வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply