4,000 தீவிரவாதிகள் பெயர் நீக்கம்- பாகிஸ்தான் அரசு ரகசிய நடவடிக்கை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் உட்பட நான்காயிரம் தீவிரவாதிகளின் பெயரை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பயங்கரவாத நிதியுதவிக்கான கண்காணிப்புக் குழுவின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றாத தீவிரவாதத்திற்கு ஒத்துழைக்கும் நாடாகவே பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களில் அந்நாட்டின் தீவிரவாதிகளின் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து 1800 பேரின் பெயர்களை நீக்கி உள்ளதாகவும் அதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் மற்றும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் எனக் கூறப்படும் ரகுமானின் பெயரும் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply