பள்ளி, கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நட்பாக பழகும் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி நண்பர்களோடு இணைந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் யாராலும் மறக்க முடியாது. அது போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 26 வயதான இளைஞர் காதலிப்பதாக கூறி சிறுமிகளை தனிமையில் அழைத்து சென்று வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூரம் நடந்துள்ளது.

 

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை மோசடி கும்பலின் வலையில் விழுந்ததுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான கார்த்திக் படிப்பை பாதியில் விட்ட கார்த்திக் இருசக்கர வாகனத்தில் வந்த ஊர் சுற்றி வந்துள்ளார். ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கார்த்திக் தனது மாய வார்த்தைகளால் அவரை தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

 

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி உள்ளார். மேலும் அவருடன் தனிமையில் இருப்பதை வீடியோவாக தனது போனில் பதிவு செய்துள்ளார். சிறுமியிடம் காதலனான பழகிய கார்த்திக் போகப்போக தனது மன்மத புத்தியைக் காட்டத் தொடங்கினார். சிறுமியிடம் தனிமையில் இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க செய்துள்ளார்.

 

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர கும்மிடிபூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினார். கார்த்திக்கின் செல்போனை ஆய்வு செய்தபோது கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மேலும் பல பெண்களுடன் மிரட்டி தனிமையில் இருக்கும் காட்சிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.

 

வழக்கின் போக்கை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மன்மதன் கார்த்திக்கின் மறுபக்கத்தை கண்டறிய தீவிர விசாரணையை மேற்கொண்டனர். கார்த்திக்கும் அவரது நண்பர்கள் 3 பேரும் காதலிப்பதாக பல பெண்களை ஏமாற்றி தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அப்படி சிக்கும் பெண்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததும் அவர்களுக்கு தெரியாமலேயே அதை வீடியோ எடுத்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

ஒரு முறை வீடியோவில் சிக்கிவிட்டால் அவ்வளவு தான் அந்தப் பெண்ணை மிரட்டி தங்களது ஆசை தீரும் வரை அந்த கும்பல் விடுவதில்லை. கார்த்திகை தகவல் பரவத் தொடங்கியதும் கல்லூரி பெண்கள் இருவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக் மற்றும் அவனின் நண்பர்கள் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

ஆண்களுடன் வரம்பு மீறாத நட்பு என்றைக்கும் ஆபத்தில்லை என்று எச்சரிக்கும் போலீசார் இதுபோன்று மிரட்டும் கும்பல்கள் பற்றி பெண்கள் அச்சமில்லாமல் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


Leave a Reply