லாரியை திருடிய வடமாநில இளைஞர்! ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து தூக்கிய போலீஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலத்தில் இருந்து திருடி செல்லப்பட்ட ஹரியானா மாநில கண்டெய்னர் லாரியை ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மீட்டு போலீசார் வடமாநில நபர் ஒருவரை கைது செய்தனர் . ஹரியானாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை ஏற்றுஏற்றிவந்த குளிர்சாதன வசதி கொண்ட 40க்கும் மேற்பட்ட லாரிகள் கருப்பூர் தண்ணீர் தொட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

இவற்றில் ஒன்று இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அது வாழைதார் பகுதியில் நிற்பதை அறிந்த சேலம் போலீசார் லாரியை மீட்டனர். அதனை திருடி சென்ற நாயந்தாஸ் என்பவனை கைது செய்தனர். பெங்களூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த நயன்தாரா கையில் பணம் இல்லாததால் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு சேலம் வந்த நிலையில் லாரியை திருடி சென்றுள்ளான்.


Leave a Reply