நோயாளிகளை அசிங்க மா பேசுறாங்க.. கேவலமா நடத்துறாங்க சார்… ஆர்.எஸ்.மங்கலம் பெண் மருத்துவர் மீது கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்!!

Publish by: ஆனந்த்குமார் --- Photo : Arrangement


ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் அசிங்கமாக பேசுவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவரை வைத்துக் கொண்டே மாவட்ட ஆட்சியர் வீரராக ராவிடம் பொதுமக்கள் நேரில் சரமாரியாக புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக சுகந்தி போஸ் என்பவர் கடந்த 15 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பரிவு காட்டுவதற்கு பதிலாக அலட்சியம் செய்வது.அவமானப்படுத்தும் வகையில் பேசுவதாக இப்பகுதி மக்கள் இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

பெண் மருத்துவர் மீது கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார் வீடியோ

 

இதனால் பெண் மருத்துவர் சுகந்தி போஸ் மீது உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேல்மட்ட மருத்துவ அதிகாரிகளிடம் சுகந்தி போசுக்கு இருக்கும் செல்வாக்கே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து 15 ஆண்டுகளாக அவர் இதே மருத்துவமனையில் பணி புரிவதற்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஆர்.எஸ்.மங்கலத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதனால் ஆர் எஸ்.மங்கலம் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதை பார்வையிட மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இன்று ஆர்.எஸ்.மங்கலம் வந்திருந்தார்.

அப்போது, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வீரராக கராவிடம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் சுகந்தி போஸ் பற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை அசிங்க, அசிங்கமா பேசுறாங்க சார்… கேவலமா நடத்துறாங்க சார்… பெண் நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் நடத்துறாங்க சார்… உரிய சிகிச்சையும் சரிவர செய்வதில்லை… நேற்று கூட ஒரு பெண்ணை அவமானப்படுத்திப் பேச அப்பெண் அழுது கொண்டே சென்ற அவலம் நடந்தது சார்… என் கலெக்டரிடம் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அப்போது பெண் மருத்துவர் சுகந்தி போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு தான் இருந்தனர்.

 

இதனையெல்லாம் கேட்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட பெண் மருத்துவரை வைத்துக் கொண்டே அவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

இதனால் குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் மருத்துவர் சுகந்தி போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கட்படுமா? என்பதே ஆர்.எஸ். பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

 


Leave a Reply