முஸ்லீம்களுக்கு கொரொனா இல்லை என்றால் மட்டுமே அனுமதி! சர்ச்சைக்குரிய விளம்பரம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முஸ்லிம் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு கொரொனா இல்லை என்றால் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மீரட் மருத்துவமனை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மீரட்டில் உள்ள மருத்துவமனை கடந்த வெள்ளியன்று உள்ளூர் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

 

கொரொனாவுக்கு நிஜாமுதீன் தப்லீக் ஜமாத்தினர் முக்கிய காரணம் என்றும் முஸ்லிம்களுக்கு சிகிச்சை தேவை என்றால் முதலில் நான்காயிரத்து 500 ரூபாய் செலுத்தி சோதனை நடத்தி தொற்று இல்லை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது விளம்பரம். இதற்காக இந்த மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரின் பாதுகாப்பு கருதியே அப்படி செய்ததாகவும் அந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அது கூறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் குறித்த பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ளகாவல் நிலையத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர் மணிமாறன் பாடல்கள் வழியாக தனிநபர் இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

கோமங்கலம், பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இவர் மேலும் பல கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை தொடர உள்ளதாக கூறியுள்ளார்.


Leave a Reply