கொரொனா தொற்றில்லாத கொடைக்கானல்…காரணம் தெரியுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொடைக்கானல் மலைப்பகுதியில் கொரொனா தொற்று என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு தொற்றின் பாதிப்பில்லாமல் மக்கள் பாதுகாப்பாக வாழும் இடமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் ? திரும்பிய இடமெல்லாம் மூலிகை செடிகள் நிறைந்த வனங்கள், சத்து நிறைந்த பழங்கள், தானியங்கள், காய்கறிகளை தன்னகத்தே கொண்டுள்ளது மலைகளின் இளவரசி கொடைக்கானல்.

 

கடுக்காய், தான்றிக்காய் என மருத்துவ குணமிக்க செடிகளும், மரங்களும் இருப்பதால் என்னவோ இன்றுவரை கொடைக்கானல் மலைவாழ் மக்களை கொரொனா வைரஸ் தொற்றாமல் உள்ளது. இங்குள்ள மக்களின் தற்சார்பு வாழ்வுமுறை இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலோங்க செய்திருந்தாலும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகளும் கொரொனா தடுப்பில் நல்ல பயனை அளித்துள்ளன.

 

நகராட்சி காவல் சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து தனிமனித இடைவெளியை உறுதி செய்து கொரொனா இல்லாத பாதுகாப்பான இடமாக கொடைக்கானலை மாற்றியுள்ளனர் .இதற்கு இயற்கையும் உறுதுணையாக உள்ளது.


Leave a Reply