கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தேவை குறைந்ததாலும் சேமிப்புக் கிடங்குகள் நிரம்பியதாலும் கச்சா எண்ணெய் விலை 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்தியாவில் டீசல் தேவை அதில் 61 விழுக்காடும், பெட்ரோல் தேவை 64 விழுக்காடும் விமான எரிபொருளின் தேவை 94 விழுக்காடு குறைந்துள்ளது.

 

இதேபோல உலகின் பல நாடுகளிலும் தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் தேவையும் குறைந்தது. விலை சரிவை தடுக்க உற்பத்தியை குறைப்பது தொடர்பாக சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

 

சேமிப்பு கிடங்குகள் முழுவதும் நிரம்பிய நிலையிலும் கச்சா எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ளதால் விலை கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 17 டாலர் 73 செண்ட்களாக உள்ளது.


Leave a Reply