கோவை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி! அன்னூரில் 47 பேரில் 46 பேருக்கு ” நெகட்டிவ் ” !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவைமாவட்டம் அன்னூரில் இருந்து கடந்த மாதம் டெல்லியில் நடைப்பெற்ற மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பிய9 பேரில் 5 பேருக்கு கொரானோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கபட்ட ஐவரும் கோவையில் உள்ள ஈ.எஸ்.ஜ மருத்துவமனை கொரானோ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி வைக்கபட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கொரானோ பரிசோதனை நடத்தப்பட்டதில் 5 பேருக்கு கொரானோ தொற்று அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கபட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கபட்டவர்களும் தற்போது கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரானாவின் தொற்று அதிகரித்துகொண்டே வருவதால் அன்னூரில் கொரானோ தொற்று ஏற்பட்டவர்கள் வசித்த பகுதிகளுக்கு ” சீல் ” வைக்கபட்டு வெளி ஆட்கள் உள்ளே நுழையவும்,வெளியே செல்லவும் தடைவிதிக்கபட்டது. இதனையடுத்து ” சீல் ” வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 47 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரானோ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்காக தனியார் திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு அவர்களை அழைத்து வந்து சமூக இடைவேளியை கடைபிடிக்கும் வகையில் தனித்தனியாக பரிசோதனை செய்யப்பட்டு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.கோவை வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் கண்ணப்பன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் பரிசோதனை சளி மாதிரி சேகரிப்பட்டுள்ள நிலையில் ஆய்வுக்கு பின்னர் கொரானோ பாதிப்பு குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ” சீல் ” வைக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. ” சீல் ” வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 47 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரானோ பரிசோதனை நடத்தப்பட்டதில் 47 பேரில் 46 பேருக்கு ” நெகட்டிவ் ” என முடிவுகள் வெளியாகி உள்ளது.

 

இதனையடுத்து கலக்கத்தில் இருந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


Leave a Reply