மொட்டை மாடியில் ஜாலியாக பட்டம் விட்ட குரங்கு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வீட்டின் மேல்பகுதியில் அமர்ந்து குரங்கு ஒன்று பட்டம் விடும் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி விட்ட நிலையில் குரங்குகள், மான்கள், காட்டெருமைகள் போன்றவை சாலைகளில் திரண்டு வருவதை நம்மால் காண முடிகிறது.

 

இந்நிலையில் குரங்கு ஒன்று பட்டம் விடும் காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி சதானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சொல்லிக் கொடுத்தார் போல பட்டம் விடும் குரங்கின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

நாகை அருகே ஊரடங்கு உத்தரவால் அறுவடைக்கு ஆட்கள் இல்லாததால் முந்திரிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் வைரவன் கார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை அறுவடை நடைபெறும் முந்திரி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஆட்கள் இல்லாமல் முந்திரி கீழே விழுந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply