பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா! பகுதி முழுவதும் சீல் இடப்பட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து பூந்தமல்லி நகராட்சி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரொனா தொற்றிருப்பதும் தெரியவந்தது. அவர் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.

 

இந்நிலையில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் கரூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக தபால் ஊழியர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

 

இதனை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் சித்தூர் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகளில் விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நிகழ்வு இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்பனை செய்ததாக தபால்துறை ஊழியரான செல்லதுரை, முருகன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.


Leave a Reply