வாட்ஸ் ஆப் இல் நடத்தப்பட இருக்கும் தேர்வுகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இன்று வாட்ஸ் அப் மூலம் தேர்வுகள் நடைபெற உள்ளது. மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்தத் தேர்வு இறுதி தேர்வு இல்லை என்பதால் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி மாணவர்களுக்கு பி‌டி‌எஃப் வகையில் கேள்விகள் அனுப்பப்படும் என்றும் மாணவர்கள் கேள்விகளுக்கு அதிலேயே பதில்கள் எழுதி மீண்டும் பிடிஎஃப் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்துவதற்கு உயர்கல்வித்துறை எந்த ஒரு வழிமுறையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் கொரொனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரே நபரும் குணம் அடைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரொனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறியுள்ளது.


Leave a Reply