நாமக்கல்லில் செவிலி மற்றும் தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கலில் செவிலி மற்றும் தூய்மை பணியாளர் ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நாமக்கல்லில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே லத்து பாடி ஊராட்சியை சேர்ந்த கருவுற்ற பெண்ணுக்கு கடந்த 13ஆம் தேதி கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை பரிசோதித்த செவிலி மற்றும் அந்த பகுதியின் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் இருவருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இருவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஹாட்ஸ்பாட் பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவருடன் பழகியவர்கள் என 597 நபர்களின் சளி மற்றும் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

 

இதில் 16 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 404 நபர்களுக்கு வைரஸ் தாக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 177 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 155 பேர் வீடுகளிலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 

நாகை மாவட்டத்தில் இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு சத்தான பழங்கள் வழங்கப்பட்டன. கொரொனா தடுப்பு நடவடிக்கையில் நாகையில் இரண்டு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், 9 துணை கண்காணிப்பாளர், 30 காவல் ஆய்வாளர்கள், 770 காவலர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

 

இவர்கள் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சரிவிகித உணவு கிடைக்கும் வகையில் ஐந்து வகையான பழங்களை வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து காதலர்களுக்கும் சத்தான பழங்கள் வழங்கப்பட்டன.


Leave a Reply