முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.20 லட்சத்தை வழங்கிய தூய்மைப் பணியாளர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் காரணியால் கிராமத்தில் வசிக்கும் சிவிர்கான் என்ற மாணவன் ரம்ஜான் பண்டிகைக்காக ஓராண்டு காலமாக உண்டியலில் சேர்த்து வைத்த 4 ஆயிரத்து 862 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

 

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நகராட்சி ஆணையர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காடு கிராமத்தை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றிவரும் சேகர் என்பவர் தனது ஒரு மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

உலக திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் ஒன்றிணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு இலவசமாக உணவு வழங்கினார். சென்னை அடுத்த செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஒன்றிணைந்து செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் என ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை கண்டறிந்து உண்ண உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்தனர்.


Leave a Reply