அமெரிக்கா நிதியை நிறுத்துவது அபாயகரமானது!

உலக சுகாதார அமைப்புகள் வழங்கும் நிதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். கொரொனாவில் இருந்து உலகை அச்சுறுத்தும் சூழலில் பன்னாட்டு சுகாதார அமைப்பதற்கான நிதி நிறுத்தப்படுவது கண்டனத்தை எழுப்பியுள்ளது.

 

கொரொனா பெருந்தொற்றால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்பது அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டு . சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு தொற்று பாதிப்பு களை மூடி மறைத்துவிட்டது உலக சுகாதார அமைப்பு என்கிறார் டொனால்ட் டிரம்ப். இதையடுத்து அந்த அமைப்புக்கான 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்திவைத்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

கொரொனாபாதிப்புகளை எதிர்த்து போராட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த சூழலில்நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டுள்ள ஐநா பொதுச்செயலாளர் ஆஞ்சநேயா யுத்தத்தில் வெற்றி பெற உலக சுகாதார அமைப்பு ஆதரவு தர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

 

உலக சுகாதார அமைப்பின் வலுப்படுத்துவது தான் இந்த நேரத்தில் முக்கிய முதலீடாக இருக்கும் என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவின் செயலை கண்டித்துள்ளார்.

 

அமெரிக்காவின் இந்த செயல் உலகில் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று கூறியுள்ள சீனா நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் நடவடிக்கைகள்கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் நெருக்கடியில் சிக்கி இருக்கும் நேரத்தில் தனது தன்னிச்சையான நடவடிக்கையால் மீண்டும் ஒரு முறை சிக்கியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.


Leave a Reply