குஜராத் எம்எல்ஏ இம்ரான் கெடவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


குஜராத் முதலமைச்சர் விஜய ரூபானி நடத்திய உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அகமதாபாத்தில் ஜபல்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் எம்எல்ஏ ஆன இம்ரானுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரொனா சிகிச்சை மருத்துவமனையில் விரைவில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இம்ரான் வேறு சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் சேர்ந்து முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் போது அவர் முதலமைச்சரிடம் இருந்து தொலைவிலேயே அமர்ந்து இருந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்வருடனான கூட்டத்திற்கு பிறகு இம்ரான் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் செய்து செய்தியாளர்களையும் சந்தித்து உள்ளனர்.

 

இந் நிலையில் இவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்பாக அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி ஒன்றான மும்பை தாராவி பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து வேலை தேடி இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் மும்பை தாராவி பகுதியில் வசித்து வருகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரொனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் 7 பேர் உயிரிழந்ததால் இப்பகுதியில் வீடு வீடாக பரிசோதனை செய்யப்படுகிறது ஏற்கனவே மும்பை மாநகரம் கொரொனா பாதிப்பால் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தாராவியிலும் பாதிப்பு அதிகமாகி உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave a Reply